நாட்டை பொறுப்பேற்கும்போது நிதியிருக்கவில்லை – பிரதமர் !

நாட்டை பொறுப்பேற்கும்போது நிதியிருக்கவில்லை – பிரதமர் !

நாட்டை பொறுப்பேற்கும்போது நிதியிருக்கவில்லை – பிரதமர் !

எழுத்தாளர் Staff Writer

29 Jul, 2018 | 7:32 pm

மட்டக்களப்பு – மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் இன்று (29) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டிருந்ததுடன், இதன்போது உரையாற்றுகையில் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

கிழக்கு மாகாணம் வடக்கு போல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டமையால் பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேறு பல திட்டங்கள் உள்ளதாகவும் இங்கு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கிழக்கில் சுற்றுலா விமான சேவையை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளோம். அதனை ஆரம்பித்த பின்னர் சுற்றுலாத்துறையினால் பலருக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் என்றும் இதன்போது பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், இவையனைத்தையும் செய்ய பாரிய நிதி வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், நாங்கள் நாட்டினை பொறுப்பேற்றபோது நிதியிருக்கவில்லை. அத்துடன் வட்டியைச் செலுத்துவதற்கு வருமானம் போதாமலுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்