சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 29-07-2018 | 7:35 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. கெரவலப்பிட்டி லக்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு சொந்தமான லக்தனவி நிறுவனத்தின் உரிமமுள்ள வேறு நிறுவனங்கள் மற்றும் பிரிவினர் தொடர்பில் காணப்படும் குளறுபடிகளினால் அதன் உண்மையான உரிமையாளர் யார் என்பது தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியுள்ளமை குறித்து Verite Research நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 02. எம்பிலிப்பிட்டிய விகாரையில் நேற்று (28) நடைபெறவிருந்த புண்ணிய நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு பதிலாக சமல் ராஜபக்ஸ வருகை தந்தமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. 03. நாட்டின் பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 04. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகளுக்கான நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (27) பிற்பகல் குவைத்தைச் சேர்ந்த தம்பதியினர் சுங்க அதிகாரிகளைத் தாக்கிய சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுங்க பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. தி.மு.க. தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் , கருணாநிதிக்கு அரசின் சார்பில் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 02. பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான், சீனாவை முன்மாதிரியாகக் கொண்டு மக்கள் சேவையில் ஈடுபட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். விளையாட்டு செய்திகள் 01. வறுமையின் பிடியிலும் விளையாட்டுத்துறையில் சாதிக்கும் மூன்று வீராங்கனைகள் சர்வதேசமட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர். 02. இந்தியா மற்றும் எ​செக்ஸ் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.