சட்டம் பின்பற்றப்படாமையே கைதிகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு காரணம்

சட்டம் பின்பற்றப்படாமையே கைதிகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு காரணம்

சட்டம் பின்பற்றப்படாமையே கைதிகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு காரணம்

எழுத்தாளர் Staff Writer

29 Jul, 2018 | 7:51 am

Colombo (News 1st) சிறைச்சாலைகளுக்குள் சட்டங்கள் பின்பற்றப்படாமையே, கைதிகள் தொடர்ந்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான காரணம் என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் நடைபெறும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒடுக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்துவரும் கைதிகள் தொடர்ந்தும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளிலுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளோருக்கும் இடையில் தொலைபேசியூடாக தொடர்புகள் பேணப்பட்டு வந்துள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சிறைச்சாலைகளில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் கடற்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்