இந்தோனேஷிய நிலநடுக்கத்தில் 10 பேர் பலி

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 10 பேர் பலி

by Chandrasekaram Chandravadani 29-07-2018 | 9:49 AM
இந்தோனேஷியாவில் 6.4 ரிச்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேஷியாவின் மத்திய பகுதியிலுள்ள லொம்போக் (Lombok) தீவில், இன்று (29) அந்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதோடு, சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பேச்சாளர் சுடொபோ பர்வோ நக்ரொஹோ (Sutopo Purwo Nugroho) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கம் லொம்போக் தீவின் மடாரம் (Mataram) நகரிலிருந்து வட கிழக்காக 50 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைதருகின்ற லொம்போக் தீவு, பாலி தீவிலிருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.