லக்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு சொந்தமான நிறுவனத்தில் சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்கள்
by Staff Writer 28-07-2018 | 8:36 PM
Colombo (News 1st) கெரவலப்பிட்டி லக்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு சொந்தமான நிறுவனத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் சந்தேகத்திற்கிடமான பல கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நேற்று (27) நியூஸ்ஃபெஸ்ட் செய்தி வௌியிட்டிருந்தது.
லக்தனவி நிறுவனத்தின் உரிமமுள்ள வேறு நிறுவனங்கள் மற்றும் பிரிவினர் தொடர்பில் காணப்படும் குளறுபடிகளினால் அதன் உண்மையான உரிமையாளர் யார் என்பது தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியுள்ளமை குறித்து Verite Research நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கிய பாரிய சிரமத்திற்காக, சபைக்கு எவ்வித கட்டணத்தையும் செலுத்தவில்லை என்பதுடன், 4.8 வீத உரித்துடைய லக்தனவி நிறுவனத்திற்கு 39.75 வீத இலாபம் செலுத்தப்பட்டுள்ளது.
22.7 பில்லியன் அதிக கடன் சுமையின் பொறுப்பை ஏற்ற அரசாங்கத்தின் உதவியினால் வேறு பங்குதாரர்கள் மிகவும் சூட்சமமான முறையில் பில்லியன் கணக்கில் இலாபத்தை ஈட்டியுள்ளதை ஒப்பிட்டு பார்க்கும் போது புலப்படுகின்றது.
லக்தனவி நிறுவனம் மின்சாரத்தை கொள்வனவு செய்யும் உடன்படிக்கையை தயாரிக்கும் போது, மின்சார சபை பாரிய சந்தேகம் ஏற்படும் வகையில் செயற்பட்டுள்ளது.
அவ்வாறு எனின், சபைக்கு இலாபம் தரக்கூடிய விடயங்களை புறக்கணித்து, குறித்த நிறுவனத்திற்கு பயன் கிட்டும் விடயங்களுக்கு எவ்வித தயக்கமுமின்றி இணக்கம் தெரிவித்து உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
5 வீத உரித்துரிமையைப் பெற்று, 2 வீத மூலதனத்தைக் கொண்டு செயற்பட்ட லக்தனவி நிறுவனம் அதிக இலாபத்தை பெறும் நிலையில், 98 வீத மூலதனத்தை வழங்கி அவதானத்துடன் செயற்படும் இலங்கை அரசாங்கத்தை பொருட்படுத்தாது நடைமுறைக்கு மாறாக செயற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
LTL Holdings நிறுவனம் மற்றும் அதன் கீழ் செயற்படும் உப நிறுவனங்களிலுள்ள சிக்கல்கள் தொடர்பில் இதற்கு முன்னரும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
8 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கோப் குழு அறிக்கையில் வௌிக்கொணரப்படும் விடயங்கள் அவற்றுள் விசேடமானவையாகும்.
கோப் குழு கூறும் வகையில், LTL Hodlings நிறுவனத்தின் 63 வீத பங்குகளை மின்சார சபை கொண்டுள்ள போதிலும், இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வரையறுக்கப்பட்டளவில் தலையீடு செய்யும் அதிகாரமே மின்சார சபைக்குள்ளது.
அத்துடன், LTL மற்றும் அதன் உப நிறுவனங்கள் அதிக இலாபத்தை அனுபவிப்பதனால், மின்சார சபையின் இலாபம் குறைவடையலாம் என 2016 ஆம் ஆண்டு கோப் குழு எச்சரித்திருந்தது.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி வழங்கப்பட்ட இலாபம் தொடர்பான அறிக்கையை கணக்காய்வாளர் திணைக்களம் ஆய்வுக்குட்படுத்தியதுடன், அந்த கணக்காய்வுக்கு அமைய 7,184 மில்லியன் ரூபா இலாபம் மின்சார சபைக்கு கிடைக்க வேண்டும்.
எனினும், மின்சார சபையின் கணக்குகளுக்கு அமைய 6,952 மில்லியன் ரூபா இலாபமே கிடைத்துள்ளது.
ஊழலுக்கு எதிராக ஆட்சியமைத்த அரசாங்கத்தின் ஊடாக இவ்வாறானதொரு நிலையை எதிர்பார்க்க முடியுமா?
மின்சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் படகொட, இலங்கை மின்சார சபையின் தலைவர் B.கனேகல, LTL Holdings இன் பிரதானியாக செயற்படும் மின்சார சபையின் தலைவர் அருண குமாரசிங்க, U.D. ஜயவர்தன, MJMN. மரிக்கார், ரவீந்திர பிட்டிகல உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிலை தொடர்பில் தெரிவிக்கும் கருத்து என்ன?