by Staff Writer 28-07-2018 | 7:01 PM
Colombo (News 1st) நெற்செய்கை அதிகரிக்கும் பட்சத்தில் கோதுமைக்கான மேலதிக வரியை அறவிடத் திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
இம்முறை நெற்செய்கை அதிகரித்துள்ளதால், அறுவடை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக தற்போது அரிசி இறக்குமதியை நிறுத்தியுள்ளதுடன், அரிசி உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் கோதுமைக்கு மேலதிக வரியை அறவிடத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
தெற்கு விவசாய நவோதய கண்காட்சியை பார்வையிடச் சென்றிருந்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.