மத்தளை விமான நிலையத்தை பொறுப்பேற்கத் தயாரில்லை

மத்தளை சர்வதேச விமான நிலைய நிர்வாகப் பொறுப்பை ஏற்கத் தயார் இல்லை: இந்தியா அறிவிப்பு

by Bella Dalima 27-07-2018 | 7:17 PM
Colombo (News 1st)  மத்தளை ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பை இந்திய விமான நிலைய அதிகார சபைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் எவ்வித யோசனைகளும் இல்லை என இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் ஜயந்த் சிங் நேற்றைய இந்திய சட்டமன்ற அமர்வின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். மத்தளை சர்வதேச விமான நிலையத்தை கையகப்படுத்துவதற்கு இந்திய அரசிற்கு சொந்தமான விமான நிலைய அதிகார சபைக்கு ஏதேனும் திட்டங்கள் காணப்படுகின்றதா என பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் புனம் மஹஜித் நேற்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இந்திய சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர், அவ்வாறான எவ்வித திட்டங்களும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். தற்போது இது குறித்து எவ்வித பிரேரணைகளும் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மத்தளை விமான பயிற்சிப் பாடசாலை மற்றும் விமான செயற்பாட்டு கண்காணிப்பு பிரிவு ஆகியவற்றை ஸ்தாபிப்பது தொடர்பில் எழுப்பிய கேள்விகளை இந்திய சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் ஜயந்த் சிங் நிராகரித்துள்ளார்.