வட மாகாண முதலமைச்சரின் மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

வட மாகாண முதலமைச்சரின் மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

வட மாகாண முதலமைச்சரின் மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Jul, 2018 | 1:44 pm

Colombo (News 1st) வட மாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் வகையில் 2017 ஆம் ஆண்டு தம்மால் வௌியிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் புவனெக்க அளுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த வர்த்தமானியை இடைநிறுத்தும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மாதம் 29 ஆம் திகதி இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

மாகாண முதலமைச்சர் தமது அபிப்பிராயத்திற்கு அமைவாக வௌியிட்ட வர்த்தமானியை இரத்து செய்யும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இல்லை என தெரிவித்து சி.வி. விக்னேஸ்வரன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்