மில்லி கிராம் கணக்கில் போதைப்பொருள் கொண்டு வருவோருக்கு மரண தண்டனை விதிக்க முடியாது: சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு

மில்லி கிராம் கணக்கில் போதைப்பொருள் கொண்டு வருவோருக்கு மரண தண்டனை விதிக்க முடியாது: சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு

மில்லி கிராம் கணக்கில் போதைப்பொருள் கொண்டு வருவோருக்கு மரண தண்டனை விதிக்க முடியாது: சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு

எழுத்தாளர் Bella Dalima

26 Jul, 2018 | 8:26 pm

Colombo (News 1st)  மில்லி கிராம் கணக்கில் போதைப்பொருள் கொண்டு வருவோருக்கு மரண தண்டனை விதிக்க முடியாது: சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு

கொள்கலன்களில் போதைப்பொருள் கொண்டு வருவோர் அமைச்சர்களாக மாறுவதற்கும் மில்லி கிராம் கணக்கில் கொண்டு வருவோர் சிறை செல்வதற்கும் இடமளிக்க முடியாது என சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு குறிப்பிட்டார்.

பாரியளவில் போதைப்பொருள் கடத்துவோரை தூக்கிலிட வேண்டும் எனவும் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு வலியுறுத்தினார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டோருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தாம் தயார் என குறிப்பிட்ட அவர், மில்லி கிராம் கணக்கில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

மரண தண்டனையை நிறைவேற்றுவதாக இருந்தால், நாட்டில் சட்டவாட்சி இருக்க வேண்டும். இலங்கையில் இன்று சட்டவாட்சி பூச்சியமாகவுள்ளது என சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு மேலும் கூறினார்.

நாட்டில் சட்டவாட்சி நடைமுறைப்படுத்தப்பட்டால், இன்று G.L. பிரீஸ் சிறையில் இருக்க வேண்டும். முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை வௌியேற்றுவதற்கு சதித்திட்டம் தீட்டி, அதற்காக ஊழல் ஆணைக்குழு என்ற நிறுவனத்தை பயன்படுத்தினர். அவரை வௌியேற்றுவதற்கு பொய்யான குற்றச்சாட்டுகளை பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர். அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஊழல் மோசடி ஆணைக்குழுவின் பணிப்பாளர் அவரை வௌியேற்றிய பின்னர், பொய்யான குற்றச்சாட்டு என்ற ரீதியில் அதனை ஊழல் மோசடி ஆணைக்குழுவின் பணிப்பாளர் வாபஸ் பெற்றார்.

எனவும் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு விளக்கமளித்தார்.

மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற மாநாடொன்றிலேயே அவர் இந்த கருத்துக்களைப் பகிர்ந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்