புனித ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து முதலாவது குழுவினர் புறப்பட்டுச் சென்றனர்

புனித ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து முதலாவது குழுவினர் புறப்பட்டுச் சென்றனர்

புனித ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து முதலாவது குழுவினர் புறப்பட்டுச் சென்றனர்

எழுத்தாளர் Staff Writer

26 Jul, 2018 | 7:29 pm

புனித ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து முதலாவது குழுவினர் புறப்பட்டுச் சென்றனர்

இம்முறை புனித ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து முதலாவது குழுவினர் இன்று புறப்பட்டுச் சென்றனர்.

ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டிற்கான ஹஜ் கடமைக்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான ஹாஜிகள் மக்கா நகர் நோக்கி பயணித்த வண்ணமுள்ளனர்.

இம்முறை இலங்கையில் இருந்து 3000 பேருக்கு ஹஜ் கடமைக்கு செல்வதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

அவர்களில் 300 பேர் அடங்கிய முதலாவது குழுவினர் இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜித்தா நோக்கி பயணித்தனர்.

இவர்களை வழியனுப்புவதற்காக விமானத்தில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் சவுதி தூதரக அதிகாரிகள், முஸ்லிம் விவகார அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்