Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01.
புதிய அரசியலமைப்பினைக் கொண்டுவரும் வாய்ப்பு இல்லை என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
02.
வட மாகாணத்தில் சீனா வீடுகளை நிர்மாணிப்பதற்கு இந்தியா இணக்கம் தெரிவிக்கவில்லை என இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
03.
ஜனாதிபதியுடன் நேற்று (25) நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, இன்று (26) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிடுவதற்கு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்தன.
04.
பலாலி விமானத்தளக் காணி கையேற்பு தொடர்பில் சிவில் விமான சேவை திணைக்களத்தின் பணிப்பாளருக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
05.
HND மாணவர்கள் கொழும்பில் இன்று (25) முன்னெடுத்த பேரணியைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.
வௌிநாட்டுச் செய்திகள்
01. ஜப்பானில் நிலவும் கடும் வெயிலால் வீசும் அனல் காற்றுக்கு இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர்.
ஜப்பான் வானிலை ஆராய்ச்சி அமைப்பு இந்த அனல் காற்றை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது.
02. பாகிஸ்தானில் குவெதா நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
விளையாட்டுச் செய்திகள்
01. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகம் தொடர்பாக நேற்று முன்தினம் (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிற்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றதாகக் கூறப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.