ஜப்பானில் கடும் வெயில்: 65 பேர் பலி

ஜப்பானில் கடும் வெயில்: 65 பேர் பலி, தேசிய பேரிடர் நிலை அறிவிப்பு

by Bella Dalima 25-07-2018 | 6:15 PM
ஜப்பானில் நிலவும் கடும் வெயிலால் வீசும் அனல் காற்றுக்கு இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். ஜப்பான் வானிலை ஆராய்ச்சி அமைப்பு இந்த அனல் காற்றை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. ஜப்பானில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் வெயிலுடனான காலநிலை நிலவுகிறது. அங்கு அதிகபட்சமாக குமகாயா என்ற இடத்தில் நேற்று முன்தினம் (23) 106 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. ஜப்பான் வரலாற்றில் இதுவே அதிகபட்ச வெப்பநிலை என தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஆகஸ்ட் மாத தொடக்கம் வரையில் அங்கு அதிகபட்சமாக 95 டிகிரி வெப்பநிலை தொடரும் என அந்நாட்டின் வானிலை ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது. வறுத்தெடுக்கும் வெயிலால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கடும் வெயிலில் மயங்கி வீழ்ந்த 22,000 பேர் வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.