செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 25-07-2018 | 6:06 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. படிப்பறிவில்லாத திருடர்களை விட கல்வி அறிவுடைய திருடர்கள் அபாயமானவர்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 02. புதிய அரசியலமைப்பு சட்டமூலத்தைத் தயாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நேற்று (24) மீண்டும் கூடியது. நிபுணர் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய 2 அறிக்கைகள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன. 03. கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இருதரப்புக்கும் இடையே சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்களே இணக்கப்பாடொன்றை எட்ட சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாகவும் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார். 04. நுண் கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொடர்பிலான முன்மொழிவு தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 05. திடீர் விபத்திற்குள்ளாகி காயமடைந்த நிலையில் சிகிச்சை பெறுவதற்காக கிராமிய வைத்தியசாலையொன்றில் அனுமதி பெறச்சென்ற மூவரை அனுமதிக்காமை தொடர்பில், முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார சேவை பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. வட கொரியா தனது முக்கிய ஏவுகணைத் தளம் ஒன்றை அழிக்க ஆரம்பித்துள்ளது. 02. கிரீஸில் பரவிய காட்டுத்தீயால் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் அதிகாரிகள், சர்வதேச ரீதியான உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டது. விளையாட்டுச் செய்திகள் 01. இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சரித் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். 02. தென்னாபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணித் தலைவராக ஏஞ்சலோ மெத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.