யாழில் இருவேறு இடங்களில் வாள்வெட்டுத் தாக்குதல்

யாழில் இருவேறு இடங்களில் வாள்வெட்டுத் தாக்குதல்

யாழில் இருவேறு இடங்களில் வாள்வெட்டுத் தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2018 | 4:56 pm

Colombo (News 1st)  யாழ். சாவகச்சேரியில் இரு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவங்களில் இருவர் காயமடைந்துள்ளனர்.

சாவகச்சேரி – சங்கத்தானை, மீனாட்சி அம்மன்கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் நேற்றிரவு 11 மணியளவில் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர் 55 வயதுடைய ஒருவரை வெட்டிக்காயப்படுத்தியுள்ளனர்.

தலையில் படுகாயமடைந்த குறித்த நபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவளை, சாவகச்சேரி – மீசாலை மேற்கில் அமைந்துள்ள வீடொன்றினுள் இன்று அதிகாலை 1.30 மணியளவில் புகுந்த வாள்வெட்டுக்குழுவினர் பெண்ணொருவரின் நகையை அபகரித்ததுடன், 53 வயதுடைய ஒருவரைத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்