by Staff Writer 24-07-2018 | 4:27 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - சுழிபுரம் சிறுமி ரெஜினாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மன்றில் சிறுமியின் மரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், நீதவான் முன்னிலையில் மரண விசாரணை இடம்பெற்றது.
பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் சட்டத்தரணி சுகாஸ் ஆஜராகியிருந்தார்.
உயிரிழந்த சிறுமியின் தந்தை, தாய், மற்றும் மாமா ஆகியோர் பிரதான சாட்சிகளாக ஆஜராகியிருந்தனர்.