லாவோஸில் குளம் உடைப்பு:  நூற்றுக்கணக்கானோர் மாயம்

லாவோஸில் குளம் உடைப்பு: நூற்றுக்கணக்கானோர் மாயம்

by Chandrasekaram Chandravadani 24-07-2018 | 2:41 PM
ஆசிய நாடான லாவோஸின் (Laos) தென் கிழக்கே உள்ள குளம் ஒன்று உடைப்பெடுத்ததில் நூற்றுக்கணக்கானோர் காணாமல்போயுள்ளதாகவும் பலர் பலியாகியுள்ளதாகவும் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அட்டாபு (Attapu) மாகாணத்திலுள்ள குறித்த குளம் நேற்று (23) உடைப்பெடுத்ததில் 6 கிராமங்களின் ஊடாக வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. குள உடைப்பால் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 6,600க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. ஆனால், குளம் உடைப்பெடுத்ததற்கான காரணம் எதுவும் வௌியாகவில்லை.