முக்கிய அணுவாயுதத் தளத்தை அழிக்கும் வட கொரியா

முக்கிய அணுவாயுதத் தளத்தை அழிக்கும் வட கொரியா

by Staff Writer 24-07-2018 | 6:18 AM
வட கொரியா தனது முக்கிய ஏவுகணைத் தளம் ஒன்றை அழிக்க ஆரம்பித்துள்ளது. வட கொரிய அணுவாயுதத் திட்டங்களின் முக்கிய ஏவுகணைத்தளங்களில் ஒன்றான சோகே ஏவுகணைத் தளத்தில் சில நடவடிக்கைகள் முன்னெடுன்னப்படுவதாகவும் அது குறித்த ஏவுகணைத் தளத்தை வட கொரியா அழிக்கும் நடவடிக்கை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்மதிப் புகைப்படங்களின் அடிப்படையில், அமெரிக்க கண்காணிப்புக் குழு குறித்த தகவலை வௌியிட்டுள்ளது. இருப்பினும், மீளவும் வட கொரியா அணுவாயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான திட்டமாக இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் நடைபெற்றது. குறித்த சந்திப்பின்போது, முழுமையான அணுசக்தி ஒழிப்புக்கு கிம் ஜோங் உன் நிகரில்லா அர்ப்பணிப்பை வௌிப்படுத்தியுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மேலும் வட கொரியாவின் அணுவாயுதப் பரிசோதனைத் தளம் விரைவில் அழிக்கப்படவுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், முக்கிய ஏவுகணைத் தளத்தை வட கொரியா அழிக்க ஆரம்பித்துள்ளததக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஏனைய செய்திகள்