நீரிழிவு நோயைத் தடுக்க உதவும் நெல் வகையொன்றை அறிமுகம் செய்வதற்கு அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
" நீரோகா " எனும் பெயரால் அழைக்கப்படும் இந்த நெல் வர்க்கத்தினால் பெறப்படும் அரிசியில் புரதம் குறைந்த அளவில் காணப்படுகின்றது.
இரத்தத்தில் சீனியின் அளவைக் கட்டுப்படுத்தும் புதிய நெல்லினம் ஒன்றை அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நெல் இனத்தில் குறைந்த அளவு புரதம் காணப்படுவதனால், இரத்தத்தில் சீனியின் அளவை கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பரீட்சார்த்த மட்டத்திலுள்ள இந்த நெல் இனத்தின் செய்கையை அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.
மக்கள் புரதச்சத்து கூடுதலான உணவை உட்கொள்வதால், சீனியின் அளவு அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்குத் தீர்வாக புதிய நெல்லினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
ஆரோக்கியத்திற்கு உகந்த பல பயிர் இனங்களை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்துவதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.