தென் ஆபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Jul, 2018 | 6:06 pm

Colombo (News 1st)  தென் ஆபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணித் தலைவராக அஞ்சலோ மெத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அஞ்சலோ மெத்யூஸ் இறுதியாக இவ்வருடம் ஜனவரி மாதம் ஸிம்பாப்வேவுக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார்.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான நிரல்படுத்தலில் இலங்கையின் திமுத் கருணாரத்ன 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 3 அரைச்சதங்களுடன் 356 ஓட்டங்களைக் குவித்தன் மூலம் அவர் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.

பந்து வீச்சாளர்களின் நிரல்படுத்தலில், இலங்கையின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் 8ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் 4 இன்னிங்ஸ்களில் 12 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

ரங்கன ஹேரத் சகலதுறை வீரர்களுக்கான பட்டியலிலும் இடம்பிடித்துள்ளதுடன், அவர் 15 ஆம் இடத்தைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விபரம்:-

1. அஞ்சலோ மெத்யூஸ், 2. தசுன் ஷானக்க, 3. குசால் பெரேரா, 4. தனஞ்சய டி சில்வா, 5. உபுல் தரங்க, 6. குசால் மெண்டிஸ், 7. திசர பெரேரா, 8. நிரோஷன் டிக்வெல்ல, 9. சுரங்க லக்மால், 10. லஹிரு குமார, 11. கசுன் ராஜித, 12. அகில தனஞ்சய, 13. பிரபாத் ஜயசூர்ய, 14. லக்‌ஷான் சந்தகன், 15. ஷெகான் ஜயசூர்ய


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்