கல்வி அறிவுடைய திருடர்கள் அபாயமானவர்கள்: எரான் விக்ரமரத்ன

கல்வி அறிவுடைய திருடர்கள் அபாயமானவர்கள்: எரான் விக்ரமரத்ன

கல்வி அறிவுடைய திருடர்கள் அபாயமானவர்கள்: எரான் விக்ரமரத்ன

எழுத்தாளர் Bella Dalima

24 Jul, 2018 | 8:09 pm

Colombo (News 1st)  படிப்பறிவில்லாத திருடர்களை விட கல்வி அறிவுடைய திருடர்கள் அபாயமானவர்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

2019 / 2020 வரவு செலவுத் திட்ட யோசனைக்கான மனித அபிவிருத்தி என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று இடம்பெற்ற மாநாடொன்றிலேயே இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைக் கூறினார்.

தேசிய மனித வள அபிவிருத்திப் பேரவை, இலங்கை பட்டையகணக்காளர் நிறுவனம் மற்றும் சர்வதேச வணிக சபை ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது எரான் விக்ரமரத்ன மேலும் கூறியதாவது,

கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் அபிவிருத்தியைக் காண்பதில்லை. எனினும், ஒரு பாலத்தை அல்லது வீதியை அமைத்தால் அந்த அபிவிருத்தி நாட்டு மக்களுக்கு தெரிகின்றது. இதுவே அரசியல்வாதிக்குள்ள சவாலாகும். கடந்த அரசாங்கம் 10 வருடங்களில் நிர்மாணித்த பெருந்தெருக்களை விட எமது அரசாங்கம் அதிகமான பெருந்தெருக்களை அமைக்கின்றது. சிலவேளை அது உங்களுக்கு தெரியாமல் இருக்கும். மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக வீதி, மத்திய அதிவேக வீதி, ரயில் மார்கம் என அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்கின்றோம். பெருந்தெருக்களை அமைப்பதை விட மனித வளத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடு. அவ்வாறு செய்தாலே நாட்டின் எதிர்காலம் வளம் பெறும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்