ஆடிவேல் சக்திவேல் பவனி செல்லக்கதிர்காமத்தை சென்றடைந்தது

ஆடிவேல் சக்திவேல் பவனி செல்லக்கதிர்காமத்தை சென்றடைந்தது

ஆடிவேல் சக்திவேல் பவனி செல்லக்கதிர்காமத்தை சென்றடைந்தது

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2018 | 5:23 pm

Colombo (News 1st)  அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேல் பெருமானைத் தாங்கிய சக்தியின் ‘ஆடிவேல் சக்திவேல்’ பவனி இன்று செல்லக்கதிர்காமத்தை சென்றடைந்தது.

முருகன், வள்ளியை திருமணம் செய்ய உதவிய விநாயகப் பெருமான் வீற்றிருக்கும் செல்லக்கதிர்காமத்தை வேல் பவனி இன்று மாலை சென்றடைந்தது.

மாணிக்கப் பிள்ளையாரின் திருத்தலத்தில் வேல் பெருமானுக்கு இன்று மாலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்திலிருந்து நேற்று (23) ஆரம்பமான வேல் பவனி நள்ளிரவு ஹம்பாந்தோட்டையை சென்றடைந்தது.

வேலவனின் வருகைக்காக ஹம்பாந்தோட்டை வாழ் மக்கள் நள்ளிரவு வரை காத்திருந்தனர்.

ஹம்பாந்தோட்டை கதிரேசன் ஆலயத்தில் நடத்தப்பட்ட விசேட பூஜைகளை ஏற்ற வேல் பெருமான், அங்கு இழைப்பாறினார்.

ஹம்பாந்தோட்டை கதிரேசன் ஆலயத்தில் இன்று காலை நடைபெற்ற பூஜைகளைத் தொடர்ந்து வேல்பவனி ஆரம்பமானது.

ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம, வீரவில ஊடாக வேல் பவனி செல்லக்கதிர்காமத்தை சென்றடைந்தது.

செல்லக்கதிர்காமம் செல்லும் வழியில், வீதியோரத்தில் காத்திருந்த பக்தர்கள் தமது காணிக்கைகளை செலுத்தினர்.

வேல் பவனி நாளைய தினம் செல்லக்கதிர்காமத்திலிருந்து கதிர்காமத்தை சென்றடையவுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்