அடையாளந்தெரியாதோர் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல்: தெல்லிப்பளையில் சம்பவம்

அடையாளந்தெரியாதோர் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல்: தெல்லிப்பளையில் சம்பவம்

அடையாளந்தெரியாதோர் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல்: தெல்லிப்பளையில் சம்பவம்

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2018 | 5:02 pm

Colombo (News 1st)  யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை, துர்காபுரம் பகுதியில் அடையாளந்தெரியாதோர் தாக்கியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த சம்பவத்திற்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

துர்காபுரம் பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்குள் நுழைந்த அடையாளந்தெரியாத 6 பேரால் இரும்புச்சங்கிலியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது இருவர் காயமடைந்துள்ளதுடன், வீட்டின் பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்