ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 23-07-2018 | 6:33 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. சக்தியின் ஆடிவேல் சக்திவேல் பவனி நேற்று (22) வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா தலைமைக் காரியாலயத்தை வந்தடைந்தது. இதன்போது, பக்த பெருமக்களிற்கு தங்க வடிவேலனின் தரிசனம் கிட்டியது. 02. பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி மற்றும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பிரதம செயலாளர் மைத்திரி குணரத்ன ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர். 03. யாழ். நல்லூரில் நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த அவரது மெய்ப் பாதுகாவலரின் ஒரு வருட நினைவஞ்சலி நேற்று (22)  நடைபெற்றது. 04. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு 250 பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களில் 50 பேர் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் மக்களைத் தௌிவூட்டும் அதிகாரிகளாக நியமிக்கப்படவுள்ளதாக ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார். 05. 45 நாட்களில் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நாங்கள் யாரும் உத்தரவிடவில்லை, ஆகையால் திவயின பத்திரிகையின் ஆசிரியரா உத்தரவிட்டார்? என நேற்று (22) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் கேள்வியெழுப்பினார். விளையாட்டுச் செய்தி 01. இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் தென்னாபிரிக்க அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது.