அமெரிக்கா - ஈரான் இடையில் பதற்றநிலை!

அமெரிக்கா - ஈரான் இடையில் பதற்றநிலை!

by Staff Writer 23-07-2018 | 6:12 PM

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான பரஸ்பர எச்சரிக்கைகளினால் இரு நாடுகளுக்குமிடையில் பதற்றநிலை உருவாகியுள்ளது.

ஈரானுடன் அமெரிக்கா தொடுக்கும் போரானது அனைத்துப் போருக்கும் மூலமாக இருக்கும் என ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி அமெரிக்காவை எச்சரித்திருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவை ஒருபோதும் மிரட்ட முடியாது எனவும் இதனால் ஈரான் கடும் பாதிப்புக்களை சந்திக்க நேரிடும் எனவும் கடுமையாகச் சாடியிருந்தார். அத்துடன், ஈரான் தமது இறந்தகாலத்தை மறக்கக்கூடாது என்றும் ஒரு நாடு வன்முறை மற்றும் மரணத்திற்கு பெயர் பெறும் காலம் வெகுதொலைவில் இல்லையெனவும் தமது டுவிட்டர் பதிவில் எச்சரித்துள்ளார். இதனால், இருநாடுகளுக்குமிடையில் பதற்றநிலை தோன்றியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.