ஶ்ரீலங்கன், மிஹின் லங்கா தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் !

ஶ்ரீலங்கன், மிஹின் லங்கா தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் !

ஶ்ரீலங்கன், மிஹின் லங்கா தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் !

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2018 | 3:47 pm

ஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் இன்று (23) ஆரம்பமாகவுள்ளன.

வாக்குமூலம் வழங்குவதற்காக நிறுவனங்களின் செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சட்டப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கா விமான சேவை என்பவற்றில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு கடந்த 14 ஆம் திகதி, ஜனாதிபதியினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன நியமிக்கப்பட்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஈ.ஏ.ஜி.ஆர். அமரசேகர, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் எம்.டீ.ஏ. ஹரல்ட் மற்றும் இலங்கை கணக்காய்வு மற்றும் கணக்காய்வு தர அய்வு சபையின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.ஜே.கே. கீகனகே ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

இந்த ஆணைக்குழு, 2006 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதியில் இருந்து 2018 ஜனவரி 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைக்கேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்