தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் முகாமையாளர்கள்

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் முகாமையாளர்கள்

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் முகாமையாளர்கள்

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2018 | 7:36 am

Colombo (News 1st) ரயில் தொழிநுட்பசேவை முகாமையாளர்களின் உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு ​கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் ஊழியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட குழு முன்வைத்த கோரிக்கைகளுக்கு இதுவரையில் தீர்வு வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய ஊதியக் கொடுப்பனவுக்கு ஏற்ப ஊக்கத்தொகையைப் புதுப்பித்தல், ரயில் பெட்டிகளில் புதிய பிரிவுகளை ஸ்தாபித்தல் மற்றும் நாளொன்றுக்கு 8 மணித்தியால மற்றும் வாரத்திற்கு 40 மணித்தியால வேலைநேரத்தை நிர்ணயித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்