தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்டில் இலங்கை வெற்றி

தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்டில் இலங்கை வெற்றி

தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்டில் இலங்கை வெற்றி

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2018 | 2:23 pm

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 199 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 338 ஓட்டங்களையும் தென்னாபிரிக்கா 124 ஓட்டங்களையும் பெற்றன.

இன்றைய நான்காம் நாளில் கைவசம் 5 விக்கெட்கள் இருக்க தென்னாபிரிக்காவின் வெற்றிக்கு 351 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

டெம்பா பவுமா மற்றும் Theunis de Bruyn ஆகியோர் 6ஆவது விக்கெட்காக 123 ஓட்டங்களைப் பகிர்ந்து தென்னாபிரிக்காவின் துடுப்பாட்டத்தை சற்று பலப்படுத்தினர்.

11ஆவது அரைச்சதத்தை எட்டிய டெம்பா பவுமா ரங்கன ஹேரத்தின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

Theunis de Bruyn டெஸ்ட் அரங்கில் கன்னி சதத்தை எட்டினார்.

எனினும், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் மேலொங்க தென்னாபிரிக்கா 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

அபாரமாக பந்துவீசிய ரங்கன ஹேரத் 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இதன்மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 என இலங்கை அணி கைப்பற்றியது.

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 278 ஓட்டங்களால் வெற்றியீட்டியமையும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்