கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

23 Jul, 2018 | 9:55 am

கனடாவின் டொரொன்டோ (Toronto) நகரில் நேற்று (22) இரவு, நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதோடு, 13 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மாறி மாறி நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் துப்பாக்கிதாரியும் பலியாகியுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிலர் உள்ளூர் வைத்தியசாலைகளிற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ள அதேநேரம், ஏனையோருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் தெரியவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்