ஆடிவேல் சக்திவேல் பவனி இன்று கதிர்காமம் நோக்கி பயணம்

ஆடிவேல் சக்திவேல் பவனி இன்று கதிர்காமம் நோக்கி பயணம்

ஆடிவேல் சக்திவேல் பவனி இன்று கதிர்காமம் நோக்கி பயணம்

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2018 | 5:54 am

Colombo (News 1st) முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட திருவேலைத் தாங்கிய, சக்தியின் ‘ஆடிவேல் சக்திவேல் பவனி’ இன்று கதிர்காமம் நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

ஆடிவேல் சக்திவேல் விழா வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மகாராஜா நிறுவன தலைமையக வளாகத்தில் நேற்று (22) வெகு விமர்சையாக நடைபெற்றது.

கதிர்காமத்தை நோக்கி செல்வச் சந்நிதியில் இருந்து புறப்பட்ட வேலாயுதப் பெருமான், நேற்று எமது தலைமையகத்தில் எழுந்தருளினார்.

முருகப் பெருமானுக்கான சிறப்பு ஹோம, அபிஷேகப் பூஜைகளை இலங்கையின் அந்தணப் பெருமக்களுடன் இணைந்து கசம்ஹாரத் திருத்தலமான திருச்செந்தூரில் இருந்து வருகைதந்த வேத விற்பனர்கள் சிறப்பாக நடாத்திவைத்தனர்.

இதனையடுத்து, கலை நிகழ்வுகளும் ஆடிவேல் விழாவை அலங்கரித்தன.

இன்று காலை நடைபெறவுள்ள சிறப்புப் பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, வேல் பெருமான் கதிர்காமத்தை நோக்கி புறப்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்