திவயினவின் ஆசிரியரா முகாம்களை அகற்றியது?.. – பிரதமர்!

திவயினவின் ஆசிரியரா முகாம்களை அகற்றியது?.. – பிரதமர்!

திவயினவின் ஆசிரியரா முகாம்களை அகற்றியது?.. – பிரதமர்!

எழுத்தாளர் Staff Writer

22 Jul, 2018 | 9:49 pm

45 நாட்களில் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நாங்கள் யாரும் உத்தரவிடவில்லை – திவயின பத்திரிகையின் ஆசிரியரா உத்தரவிட்டார் ? – பிரதமர் கேள்வி

தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று (22) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டபோதே பிரதமர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

வட மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் 457 தொண்டர் ஆசியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ். இந்துக்கல்லூரியில் இன்று நடைபெற்றது.

“பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன் மேம்படுத்துவது தொடர்பில் நாம் கலந்துரையாடுகின்றோம். காங்கேசன்துறை தொடர்பில் பேசுகின்றோம். கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் நாம் அபிவிருத்து தொடர்பில் பேசியுள்ளோம். வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஐ.நாவும் நான்கு இந்திய நிறுவனங்களும் முன்வந்துள்ளன.” எனக்கூறிய பிரதமர், “ஞாயிறு திவயின பத்திரிகையை வாசித்தேன். 45 நாட்களில் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலமைச்சர் உத்தரவிட்டாரா என நான் ஆராய்ந்தேன். அவர் உத்தரவிடவில்லை. இராணுவத் தளபதியிடம் வினவினேன். முகாம்கள் மூடப்படுவதில்லை எனக் கூறினார். அவ்வறாயின் யார் மூடுவது? திவயினவின் ஆசிரியரா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்