தடுமாறும் தென்னாபிரிக்கா!

தடுமாறும் தென்னாபிரிக்கா!

தடுமாறும் தென்னாபிரிக்கா!

எழுத்தாளர் Staff Writer

22 Jul, 2018 | 10:35 pm

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் தென்னாபிரிக்கா தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.

490 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு துடுப்பெடுத்தாடும் தென்னாபிரிக்கா இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்களை பெற்றிருந்தது.

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 338 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்தாடிய தென்னாபிரிக்கா 124 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

3 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களுடன் இலங்கை அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.

59 ஓட்டங்களுடன் களமிறங்கிய திமுத் கருணாரத்ன மேலதிகமாக 26 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

ஏஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் அரங்கில் தனது 29 ஆவது அரைச்சதத்தை எட்டிய நிலையில் 71 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தது.

அதன்படி, தென்னாபிரிக்காவின் வெற்றி இலக்கு 490 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

அந்த இலக்கை நோக்கி பதிலளித்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் முதல் ஐந்து விக்கெட்களும் 113 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

Theunis de Bruyn 45 ஓட்டங்களுடனும் டெம்பா பவுமா 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

ரங்கன ஹேரத் மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்