சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

22 Jul, 2018 | 7:26 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் ​செய்திகள்

01. மக்களின் நலன் கருதி நாட்டை ஒன்றிணைத்த மக்கள் சக்தி திட்டம், மற்றுமொரு பாரிய தேசியப் பணியில் நேற்று (21) கால்த்தடம் பதித்தது.

இளம் தலைமுறையினரைக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்ட ”மக்கள் சக்தி – V’Force’ தன்னார்வப் படையணியின் நடவடிக்கை ​நேற்று சீகிரியாவில் நடைபெற்றது.

02. சுவசெரிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் அவசர அம்பியூலன்ஸ் சேவை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (21) யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

03. யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வௌிநாட்டுச் செய்திகள்

01. இந்தியாவின் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 126 வாக்குகளும் எதிராக 325 வாக்குகளும் கிடைத்தன.

02. இலங்கை அரசாங்கம் பறிமுதல் செய்துள்ள படகுகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளையாட்டுச் செய்திகள்

01. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், சென்னையில் நடைபெற்று வரும் இளையோருக்கான ஸ்குவாஷ் உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க சுவிட்சர்லாந்தின் முதற்தர வீராங்கனை மறுப்புத் தெரிவித்துள்ளார்.

02. பளு தூக்கல் விளையாட்டில் வட மாகாணத்திற்கு பெருமை சேர்க்கும் வீராங்கனையாகத் திகழ்கிறார் விஜயபாஸ்கர் ஆர்ஷிகா.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்