சக்தியின் ஆடிவேல் திருவிழா இன்று தலைமைக் காரியாலயத்தில்

சக்தியின் ஆடிவேல் திருவிழா இன்று தலைமைக் காரியாலயத்தில்

சக்தியின் ஆடிவேல் திருவிழா இன்று தலைமைக் காரியாலயத்தில்

எழுத்தாளர் Staff Writer

22 Jul, 2018 | 6:25 am

Colombo (News 1st) தங்க வடிவேலனின் ஆடிவேல் திருவிழா இன்று (22) எம்.எடி.வி., எம்.பி.சி. தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட திருவேல் பவனி, கடந்த 19 ஆம் திகதி தொண்டைமனாறு செல்வச்சந்நிதி தேவஸ்தானத்திலிருந்து ஆரம்பமானது.

இதனையடுத்து, நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்ற சக்தியின் ஆடிவேல் சக்திவேல் பவனி, இன்று காலை கொழும்பு – ஜிந்துப்பிட்டி ஶ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தை வந்தடைந்தது.

அதேநேரம் இன்றைய தினம், கொழும்பு – 2, பிறேபுரூக் பிளேஸில் அமைந்துள்ள எமது தலைமையக வளாகத்தில் வேல்பெருமான் எழுந்தருளச் செய்யப்படவுள்ளதுடன் விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்