50 பீப்பாய் எத்தனோலுடன் மூவர் கைது

50 பீப்பாய் எத்தனோலுடன் மூவர் கைது

50 பீப்பாய் எத்தனோலுடன் மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2018 | 9:55 am

Colombo (News 1st) ஜா – எல பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட 50 பீப்பாய் எத்தனோலுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லொறி மற்றும் காரில் எத்தனோலைக் கொண்டுசென்ற வேளையிலேயே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, பதுக்கி வைத்திருந்த மேலும் எத்தனோல் பீப்பாய்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், இதுவரை 50 எத்தனோல் பீப்பாய்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கலால்வரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்