வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

21 Jul, 2018 | 6:46 am

Colombo (News 1st)

உள்நாட்டுச் செய்திகள்

01. புதிய அரசியலமைப்பு சட்டமூலத்தினை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு சமர்ப்பித்த ஆவணம் வழிநடத்தல் குழுவால் நிராகரிக்கப்பட்டது.

கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரது அரசியல் நோக்கத்திற்காக இந்தச் செயற்பாடுகளை மேற்கொள்வதாக பாராளுமன்றத்தில் எதிர்த்தரப்பு நேற்று (19) குற்றஞ்சாட்டியது.

02. முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் தேனீ கொட்டியதில் 40க்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

கல்லூரி கட்டடத்திலிருந்த தேன் கூடொன்று கலைந்ததில், நேற்று (20) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

03. அவுஸ்திரேலியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பலரிடம் சுமார் ஒரு கோடி ரூபா நிதி மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

04. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரி மஹாகமகே காமினி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினரால் நேற்று (20) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

05. மாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்விற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு சபாநாயகரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 6 பேர் கொண்ட குழுவொன்றே நியமிக்கப்பட உள்ளதாக சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வௌிநாட்டுச் செய்திகள்

01. இஸ்ரேலை யூத நாடாகப் பிரகடனம் செய்யும் புதிய சட்டம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (19) நிறைவேற்றப்பட்டது.

02. இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் இளம் பெண்ணொருவர் 40 பேரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்

01. இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெஃப்ரி வென்டர்சேவுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை மூலம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்