மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வர்த்தகம்: நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வர்த்தகம்: நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வர்த்தகம்: நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2018 | 4:49 pm

Colombo (News 1st)  பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்விசாரா ஊழியர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதமருக்கும் கல்வி அமைச்சருக்கும் கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் அஜித் திலகரட்ன தெரிவித்தார்.

போதைப்பொருள் வர்த்தகர்கள் சூட்சுமமான முறையில் மாணவர்களுக்கு போதைப்பொருள் வழங்குவது அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலை ஊழியர்களையும் பாடசாலை சிற்றுண்டிச்சாலை ஊழியர்களையும் இதற்காக போதைப்பொருள் வர்த்தகர்கள் பயன்படுத்துவதாக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கண்டி, குருநாகல் பகுதிகளில் பிரசித்தி பெற்ற பாடசாலைகளிலும் போதைப்பொருள் வர்த்தகம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்