மக்கள் சக்தி மற்றுமொரு பாரிய தேசியப் பணியில் காற்தடம்

மக்கள் சக்தி மற்றுமொரு பாரிய தேசியப் பணியில் காற்தடம்

மக்கள் சக்தி மற்றுமொரு பாரிய தேசியப் பணியில் காற்தடம்

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2018 | 8:55 pm

Colombo (News 1st)  மக்களின் நலன் கருதி நாட்டை ஒன்றிணைத்த மக்கள் சக்தி திட்டம், மற்றுமொரு பாரிய தேசியப் பணியில் இன்று காற்தடம் பதித்தது.

இளம் தலைமுறையினரைக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்ட ”மக்கள் சக்தி – V’Force’ தன்னார்வப் படையணி இன்று சீகிரியாவிற்கு சென்றது.

நாட்டிற்காக தமது கடமைகளை நிறைவேற்றும் நோக்கில், நாட்டின் நாளாத்திசையிலிருந்தும் வருகை தந்த பல குழுக்கள் V’Force-உடன் இணைந்து கொண்டனர்.

மக்கள் சக்தி தன்னார்வத் தொண்டர்கள் சீகிரியா நோக்கி இன்று காலை பயணமாகினர்.

சீகிரியாவின் மேற்பகுதி மற்றும் வடக்கு நுழைவாயில் பகுதியை சுத்தப்படுத்தும் நடவடிக்கை, மொரட்டுவை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

மத்திய கலாசார நிதியம் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் முழுமையான மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை இடம்பெற்றது.

சீகிரியாவின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காகக் கொண்டுவரப்பட்டிருந்த கற்களை, குன்றின் மேற்பகுதிக்குக் கொண்டு செல்ல தன்னார்வத் தொண்டர் குழுவினர் நடவடிக்கை எடுத்தனர்.

சீகிரியாவை சூழவுள்ள பகுதி சுத்தப்படுத்தப்பட்டதன் பின்னர் தன்னார்வப் படையணியின் பிரதிநிதிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பதக்கங்களைப் பெற்றுக்கொண்டவர்கள், அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

ஆகஸ்ட் 18 ஆம் திகதி, மக்கள் சக்தி தன்னார்வத் தொண்டர்கள் சிலாபம் கடற்கரையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்