பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் குறித்த அறிக்கை

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் குறித்த அறிக்கை

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் குறித்த அறிக்கை

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2018 | 9:47 am

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில், இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை அரசாங்கம் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை முன்னிட்டு, குற்றச்செயல்கள் இடம்பெற்ற நீதிமன்றங்களிலிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 5 மாதங்களில் 350 துப்பாக்கிகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் பல துப்பாக்கிகளிற்கு அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், பறிமுதல் செய்யப்பட்ட வௌிநாட்டுத் துப்பாக்கிகளின் இலக்கங்களை அடையாளங் காண்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

வௌிநாட்டுத் துப்பாக்கிகளில் பொறிக்கப்பட்டுள்ள இலக்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ருவன் குணசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்