பதுளை வனப்பகுதிகளில் பரவிய தீ

பதுளை வனப்பகுதிகளில் பரவிய தீ

பதுளை வனப்பகுதிகளில் பரவிய தீ

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2018 | 6:56 am

Colombo (News 1st) பதுளை மாவட்டத்தின் வனப்பகுதிகளில் தீ பரவியுள்ளதாக மாவட்டத்தின் இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளையின் வெலிமட, எல்ல, ஹல்துமுல்ல மற்றும் கந்தகெட்டிய ஆகிய பகுதிகளில் தீ பரவியுள்ளமை பதிவாகியுள்ளதாக நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் ஈ.எல.எம். உதயகுமார தெரிவித்துள்ளார்.

நிலவும் வரட்சியுடனான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீயினைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்