கொடிகாமத்தில் வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயம்

கொடிகாமத்தில் வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயம்

கொடிகாமத்தில் வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2018 | 4:59 pm

Colombo (News 1st)  யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கொடிகாமம் – வெள்ளம் பொக்கட்டி பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் எனினும் அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்