கிளிநொச்சியில் பிரதமரின் நிகழ்விற்கு நலத்திட்டம் வழங்குவதாகக் கூறி அழைத்துச்செல்லப்பட்ட மக்கள்

கிளிநொச்சியில் பிரதமரின் நிகழ்விற்கு நலத்திட்டம் வழங்குவதாகக் கூறி அழைத்துச்செல்லப்பட்ட மக்கள்

கிளிநொச்சியில் பிரதமரின் நிகழ்விற்கு நலத்திட்டம் வழங்குவதாகக் கூறி அழைத்துச்செல்லப்பட்ட மக்கள்

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2018 | 10:15 pm

Colombo (News 1st)  சுவசெரிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் அவசர அம்பியூலன்ஸ் சேவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (21) யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

சுவசெரிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் 1990 அவசர அம்பியூலன்ஸ் சேவைக்காக, வட மாகாணத்திற்கு 20 அம்பியூலன்ஸ் வண்டிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்திய நிதியுதவியின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், துணைத்தூதுவர், இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, வட மாகாண முதலமைச்சர் மற்றும் வட மாகாண அமைச்சர்கள் , உறுப்பினர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஸ்கைப் தொழில்நுட்பத்தினூடாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கான தானிய பாதுகாப்புக் களஞ்சியசாலை இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்தத் தானியக் களஞ்சியசாலை 265 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கலந்துகொண்ட இந்நிகழ்விற்கு மக்கள் நலன்திட்டம் வழங்கப்படுவதாகத் தெரிவித்து தம்மை அழைத்து வந்ததாக மக்கள் குற்றஞ்சாட்டினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்