ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத்திணைக்கள அதிகாரிக்கு விளக்கமறியல்

ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத்திணைக்கள அதிகாரிக்கு விளக்கமறியல்

ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத்திணைக்கள அதிகாரிக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2018 | 4:34 pm

Colombo (News 1st)  இலஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்ட ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் மஹகமகே காமினி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பன்னிப்பிட்டிய பகுதியில் இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

10 வருடங்கள் பழமைவாய்ந்த இரண்டு வாகனங்களை ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்வதற்கான பரிந்துரையை வழங்குவதற்கு அவர் இலஞ்சம் பெற்றுள்ளார்.

ஏற்கனவே இதற்கான அனுமதி வழங்கியிருந்த போதிலும், இலஞ்சம் வழங்காவிடின் குறித்த அனுமதியை இரத்து செய்வதாக அச்சுறுத்தி இலஞ்சம் கோரியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்