எவ்வித இடையூறு ஏற்பட்டாலும் மரணதண்டனை அமுல்படுத்தப்படும்

எவ்வித இடையூறு ஏற்பட்டாலும் மரணதண்டனை அமுல்படுத்தப்படும்

எவ்வித இடையூறு ஏற்பட்டாலும் மரணதண்டனை அமுல்படுத்தப்படும்

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2018 | 12:34 pm

Colombo (News 1st) எவ்வித இடையூறு ஏற்பட்டாலும் மரணதண்டனை அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மரணதண்டயையை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யப்போவதாக, நாளை ஞாயிற்றுக்கிழமை (22) வௌியாகவுள்ள தேசிய பத்திரிகை ஒன்றின் முதல்பக்கத்திற்கு செய்தி தயார்செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, அது முற்றுமுழுதான பொய்யாகும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

எவ்வகையான எதிர்ப்புக்கள் வந்தாலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மரணதண்டணையை செயற்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்