இலங்கை பறிமுதல் செய்த படகுகளுக்கு இழப்பீடு வழங்குமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை

இலங்கை பறிமுதல் செய்த படகுகளுக்கு இழப்பீடு வழங்குமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை

இலங்கை பறிமுதல் செய்த படகுகளுக்கு இழப்பீடு வழங்குமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2018 | 5:15 pm

Colombo (News 1st)  இலங்கை அரசாங்கம் பறிமுதல் செய்துள்ள படகுகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராமநாதபுரம், புதுவை, நாகை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இராமேஸ்வரத்தில் நேற்று (20) நடத்திய கூட்டத்தின் பின்னரே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தால் 187 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மத்திய அரசாங்கத்தால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் இராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் என்.ஜே. போஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது வாழ்வாதாரமான படகுகளை இழந்து உணவிற்கும் வழியின்றி அவதியுறுவதாக புதுக்கோட்டை மீனவர் சங்கத் தலைவர் தமிழ் செல்வன் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்