கடல் அட்டைகளை கடத்த முற்பட்ட இருவர் பாம்பனில் கைது

கடல் அட்டைகளை கடத்த முற்பட்ட இருவர் பாம்பனில் கைது

கடல் அட்டைகளை கடத்த முற்பட்ட இருவர் பாம்பனில் கைது

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2018 | 5:22 pm

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடல் அட்டைகளைக் கடத்த முற்பட்ட இருவர் பாம்பன் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாம்பன் கடற்கரை பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 750 கிலோகிராம் கடலட்டை கைப்பற்றப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இரண்டு சந்தேகநபர்களும் வேதாளை மற்றும் தூத்துக்குடி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதி மிக்கவை எனவும் தமிழக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கைக்கு கடத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கடல் அட்டைகளை கடந்த 13 ஆம் திகதி தனுஸ்கோடி கடல் பாதுகாப்பு பொலிஸார் மீட்டனர்.

300 கிலோ எடை கொண்ட சுமார் 60 இலட்சம் இந்திய ரூபா பெறுமதியான கடலட்டைகள் கைப்பற்றப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்