இந்திய அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

இந்திய அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

இந்திய அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2018 | 8:50 am

இந்தியாவின் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 126 வாக்குகளும் எதிராக 325 வாக்குகளும் கிடைத்துள்ளன.

மொத்தமாக 451 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்களித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை எனவும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாகவும் தெரிவித்து மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானமானது, மத்திய அரசுக்கு எதிராக கடந்த 15 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆகும்.

தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியன ஆதரவளித்தன.

நேற்று (20) காலை முதல் விவாதம் நடைபெற்று வந்ததுடன், நேற்று இரவு 9 மணியளவிலேயே பிரதமர் நரேந்திரமோடி மக்களவையில் உரையாற்றினார்.

பாரதப் பிரதமர் சுமார் ஒன்றரை மணித்தியாலம் உரை நிகழ்த்தியதுடன், அதன்பின்னர் வாக்கெடுப்பு நடைபெற்றது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு தமிழகத்தின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்