மாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வுக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை

மாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வுக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை

மாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வுக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

20 Jul, 2018 | 6:05 pm

Colombo (News 1st) மாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்விற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு சபாநாயகரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 6 பேர் கொண்ட குழுவொன்றே நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடலை எதிர்வரும் 26 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், நிமல் சிறிபால டி சில்வா, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்ரிய மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் கே.தவலிங்கம் ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இன்று நடைபெற்றது.

தற்போது நாட்டில் பேசுபொருளாக உருவாகியுள்ள மாகாண சபை தேர்தல் தொடர்பில் இந்த கூட்டம் நடைபெற்றது.

எதிர்வரும் அக்டோபர் மாத நிறைவிற்குள் இணக்கப்பாடு எட்டப்படும் எனின், அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதி மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமென இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்