ஹெரோயின் வர்த்தகம் தொடர்பில் பிரதிவாதியொருவருக்கு ஆயுள்தண்டனை

ஹெரோயின் வர்த்தகம் தொடர்பில் பிரதிவாதியொருவருக்கு ஆயுள்தண்டனை

ஹெரோயின் வர்த்தகம் தொடர்பில் பிரதிவாதியொருவருக்கு ஆயுள்தண்டனை

எழுத்தாளர் Staff Writer

19 Jul, 2018 | 7:23 am

Colombo (News 1st) ஹெரோயின் வர்த்தகம் தொடர்பில் குற்றவாளியென அறிவிக்கப்பட்ட பிரதிவாதியொருவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (18) ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

7 கிராம் 93 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினை விற்றமை தொடர்பில் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பிரதிவாதி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்த கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன், குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்துள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கொழும்பு – மட்டக்குளி பகுதியில் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி குறித்த நபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்