வடக்கில் இராணுவத்தை குறைக்கவோ முகாம்களை அகற்றவோ போவதில்லை: ருவன் விஜேவர்தன

வடக்கில் இராணுவத்தை குறைக்கவோ முகாம்களை அகற்றவோ போவதில்லை: ருவன் விஜேவர்தன

வடக்கில் இராணுவத்தை குறைக்கவோ முகாம்களை அகற்றவோ போவதில்லை: ருவன் விஜேவர்தன

எழுத்தாளர் Bella Dalima

19 Jul, 2018 | 7:47 pm

Colombo (News 1st)  வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை குறைக்கவோ, முகாம்களை அகற்றவோ போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

ஆவா குழுவை பயங்கரவாத குழுவாகக் காண்பித்து எதிர்க்கட்சியினர் பல்வேறு கருத்துக்களைக் கூறினாலும், நாட்டின் பாதுகாப்பிற்கு எவ்வித அழுத்தங்களும் இல்லை என ருவன் விஜேவர்தன குறிப்பிட்டார்.

ஆவா குழுவின் 13 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அக்குழுவிற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பியகம பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இக்கருத்துக்களைக் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்