யாழ்ப்பாணத்தில் மாணவியிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட ஆசிரியர் கைது

யாழ்ப்பாணத்தில் மாணவியிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட ஆசிரியர் கைது

யாழ்ப்பாணத்தில் மாணவியிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட ஆசிரியர் கைது

எழுத்தாளர் Staff Writer

19 Jul, 2018 | 3:29 pm

Colombo (News 1st)  யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

குறித்த ஆசிரியரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 13 வயதான மாணவியிடமே ஆசிரியர் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்